8 குழந்தைகள் உயிரை பறித்த… “கோல்ட்ரிப்” இருமல் மருந்துக்கு 3 மாநிலங்களில் தடை…!!

By Soundarya on ஐப்பசி 5, 2025

Spread the love

ராஜஸ்தானில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் coldrif இருமல் சிரப்பை மத்தியபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கேரள அரசும் தற்போது தடை செய்துள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் உடற்கூறாய்வில் சிறுநீரகத் திசுவில் Diethylene glycol என்னும் ரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மை மற்றும் பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகும்.