ADMK அல்ல; அது EDMK…. மொத்தத்தையும் கெடுத்துவிட்ட இபிஎஸ்… TTV தினகரன் காட்டம்….!

By Nanthini on ஐப்பசி 5, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் NDA கூட்டணியில் இருந்து விலகினர். இதனைத் தொடர்ந்து இவர்களில் ஒவ்வொரு நபரும் அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்காக அதிமுகவின் அடிப்படை விதிகளை மாற்றி அமைத்தவர் EPS என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இபிஎஸ்-ஐ தவிர ராமசாமி அல்லது குப்புசாமியோ யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் NDA கூட்டணிக்கு தனது ஆதரவு உண்டு என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும் ADMK தற்போது EDMK ஆக மாறிவிட்டது என்றும் விமர்சித்தார். கூட்டணி பற்றி டிசம்பரில் தெரிவிப்பேன் என்று டிடிவி தினகரன் மீண்டும் கூறியுள்ளார்.