10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…! மாதம் ரூ.35,100 சம்பளத்தில் வேலை… விண்ணப்பிக்க கடைசி தேதி….? முழு விவரம் இதோ….!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகில் திண்டிவனம் வட்டத்தில் காலியாக இருக்கும் 11 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.07. 2025 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி பி.சி, எம். பி.சி, டி.என்.சி பிரிவினர் 39 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி ஆதரவற்ற விதவை 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் சலுகை கொடுக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு 11,500 முதல் 35, 100 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாசித்தல் மற்றும் எழுத்து திறன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். 15.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.