ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை. ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐசிஐ இடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் கூறியிருந்தார். இதற்கிடையில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களை கொடுக்க தயார் என்றும் ஆனால் ஒரு கண்டிஷன் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி கூறியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சையில் பிசிசிஐ குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி கோப்பையை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்கு இன்னும் கோப்பை ஒப்படைக்கப்படாத நிலையில், நக்வி அதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார், ஆனால் மென் இன் ப்ளூ அதை எப்படி அல்லது எப்போது பெறுவார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
