ஒரு நாள் கூத்துக்கு எதுக்கு இந்த அலப்பறை?… 35 வயது பெண்ணை மணந்த மறுநாளே உயிரை விட்ட 75 வயது முதியவர்… அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 2, 2025

Spread the love

75 வயதான முதியவர் ஒருவர் ஒரு வருட தனிமைக்கு பிறகு தன்னுடைய வயதில் பாதி வயதுக்குள் குறைவான பெண் ஒருவரை மணந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 75 வயதான சங்ருராம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய முதல் மனைவியை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இவர் தன்னை விவசாயம் செய்து காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த 29ஆம் தேதி ஜலால்பூர் பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தங்களுடைய திருமணத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். இவர்களுடைய திருமணத்திற்கு முதியவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மறுமணம் முடிந்த மறுநாள் காலையில் திடீரென்று முதியவர் உயிரிழந்தார். இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இறுதி சடங்குகளை உறவினர்கள் நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திடீர் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.