“ஆபத்தான Blue Whale கேம் போல ஆபத்தானவர் விஜய்” அவரை யாரோ இயக்குகிறார்கள்… வழக்கறிஞர் அருள்மொழி குற்றசாட்டு..!!

By Soundarya on ஐப்பசி 1, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக TVK தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் நாங்கள் பேசினோம் . அதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால்என்னை என்ன வேண்டுமானானலும் செய்யுங்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது, “ஆபத்தான Blue Whale கேமில் குழந்தைகள் சிக்கியதுபோல், ஒரு ஆபத்தான மனிதரிடம் சிக்கியுள்ளனர்.

அந்த கேமை இயக்குபவர்கள் யார் என்று தெரியாது. மக்கள் மீது அக்கறை உள்ளவர்களுக்கு அதை இயக்குபவர்கள் மீது எப்படி பயம் வருமோ அது மாதிரியான அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. விஜயின் வீடியோவுக்கு யாரோ வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் .தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றும் முயற்சியில் விஜய் யாரோ இயக்குகிறார்கள்” என்று கூறியுள்ளார்.