கரூர் துயர சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று மாலை திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜாமின்கோரி அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இஇதனை விசாரித்த நீதிபதி, அக்.3-ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்து நிபந்தனை ஜாமினில் பெலிக்ஸ் ஜெரால்டை விடுவித்தார்.
