கரூர் சம்பவம்… 41 பேர் மரணத்திற்கு காரணம் திமுக அமைச்சர் தான்… விஜய் கட்சி நிர்வாகி தற்கொலை….!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த விவகம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரூர் துயர சம்பவத்திற்கு திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்  ஒருவர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விற்பட்டு கிளை செயலாளரான ஐயப்பன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஐயப்பனின் உடல் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.