IND vs WI: மற்றொரு வெஸ்ட் இன்டீஸ் வீரர் விலகல்…. ரசிகர்களுக்கு ஷாக்…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகபந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விலகியுள்ளார். முதுகில் காயம் ஏற்பட்டு குணமடைந்த நிலையிலும் மருத்துவ அறிக்கையில் காயத்தில் தாக்கம் உள்ளதாக இருந்ததால் அவர் விலகியுள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக ஷமார் ஜோசப் விலகியது குறிப்பிடத்தக்கது.