BREAKING: கரூர் துயர சம்பவம்… சற்றுமுன் மௌனம் கலைத்தார் ஆதவ் அர்ஜுனா…!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் விஜய் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் மரணத்தின் வழியையும் கரூர் மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழி இன்றி தவித்து வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மரணத்தின் வழியை ஐந்து வயது சிறுவனாக தனது தாயின் தற்கொலையை பார்த்த போதே உணர்ந்ததாக தெரிவித்த அவர், அந்த வலியை தற்போது மீண்டும் இந்த மரணங்கள் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையை சுமக்கும் உறவாக தனது பயணம் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.