தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொடர்விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் அறிவுறுத்தலின்படி ஏற்கனவே அரசுக்கு எதிராக ஐகோர்ட்டை நாடி உள்ள TVK சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது. மேலும் பிரச்சார கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதாகவும் கற்கள் எறியப்பட்டதாகவும் CTR நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
