தமிழகத்தை பொறுத்தவரையில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் கிடைக்கின்றன. குறிப்பாக தற்போது மகளிர் உரிமைத் தொகை அரசு சார்பில் வழங்கப்படும் நிலையில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் கிடைக்கிறது. அதனால் அரசு வழங்கக்கூடிய அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாகும்.
தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். தமிழக அரசு வழங்கும் ரேஷன் கார்டுக்கு மனு கொடுத்து ஒரே நாளில் பெற முடியுமா என்றால் முடியும். அதற்கான வழி உள்ளது. வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைத்திருக்க கூட்டத்தில் மனு அளித்தால் உடனடியாக பரிசீலனை செய்து ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கூட பலருக்கும் ஒரே நாளில் ரேஷன் கார்டு, பட்டா, ஓய்வூதிய சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
