அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு பத்து நாட்களில் கெடு விதித்த செங்கோட்டையன் அவ்வாறு ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளாவிட்டால் அந்த பணியை நாங்களே செய்வோம் என்று கூறியிருந்த நிலையில் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை அவர் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை சென்ற அவர் டிடிவி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆனால் செங்கோட்டையன் தான் யாரையும் சந்திக்கவில்லை வதந்தி பரப்பவர்களுக்கு என்னால் பதில் கூற முடியாது என்று கூறினார். இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும் கூறினார். இந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு வதந்தி பரப்பினார்கள் என்றும், மருத்துவமனையில் உள்ள என் மனைவியை பார்க்க போனேன் என்றும் செங்கோட்டையம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக டெல்லி சென்ற போதும் கூட ஹரித்துவார் கோயிலுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அமைச்சர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து விட்டு வந்து பேட்டி கொடுத்தார். இதே போல இன்னும் சில நாட்களில் டிடிவி மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து மனம் திறந்து சொல்வார் என்று இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.
