அருகே 2 பிள்ளைகள்…! சுதாரித்த தந்தை…. வேகமாக விரட்டிய காட்டு யானை…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்….!!

By Devi Ramu on புரட்டாதி 27, 2025

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் பொம்மனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் செந்தில் என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து செந்தில் தனது 2 பிள்ளைகளையும் டியூஷனுக்கு சென்று அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கொட்டத்து அம்மன் கோவில் அருகே காட்டு யானை நடந்து வந்தது. இதனை பார்த்ததும் செந்தில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றார்.

இருப்பினும் யானை வாகனத்தை வேகமாக துரத்தி சென்று செந்திலை தாக்கியது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ வேடத்திற்கு சென்று காயமடைந்த செந்திலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.