தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் இரா.ப. சந்திரசேகரன், சமூக ஆர்வலர் சாசா உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதேபோல பல்வேறு மாற்று கட்சியினரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். குறிப்பாக கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவரை இணைத்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே குழப்பம் எழுந்தது. இதை தவிர்க்க முதல்வர் ஸ்டாலினே மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் விவகாரத்தை நேரடியாக கையில் எடுத்துள்ளாராம்.
