தலை அளவுக்கு வளர்ந்த கட்டி…! 16 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதியவர்…. ரஷ்யாவில் நடந்த வினோத சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 27, 2025

Spread the love

ரஷ்யாவை சேர்ந்த ஒரு நபரின் கழுத்து பின் புறத்தில் ஏதோ சதை வளர ஆரம்பித்தது. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சதை வளர ஆரம்பித்தும் அவர் கவனிக்காமல் சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் இத்தனை ஆண்டுகளாக தலை அளவுக்கு அந்த சதை வளர்ந்துவிட்டது. ஒரு கட்டத்தில் அது கனமானதால் அந்த நபர் வேறு வழியின்றி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அது லிபோமா கட்டி என்பதை கண்டறிந்தனர்.

தோல், தசை அடுக்குக்கு இடையில் உருவாகக்கூடிய அந்த கொழுப்பு கட்டி பொதுவாக சிறியவை மற்றும் மென்மையாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது வளர்ந்து ஆபத்தாகவே மாறிவிடும். அறுவை சிகிச்சை தான் அதற்கு ஒரே தீர்வு. இதனால் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றி விட்டனர். இதுபோன்ற கொழுப்பு கட்டி வளரும் போது சரியான நேரத்தில் மருத்துவரை சந்தித்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.