தமிழக சட்டசபை தேர்தல் 2026 இல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் களம் தற்போதையிலிருந்து சூடு பிடிக்க விட்டது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, TVK உட்பட பல கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவ உள்ளது. அதாவது திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக கூட்டணியில் ஒரு அணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கிறது.
இந்நிலையில் இன்று (செப்.26) நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் வெறும் சனிக் கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல.. ஞாயிற்றுக் கிழமை கூட சுத்திட்டுதான் இருப்பேன். வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் வெளியூரில் தான் இருப்பேன்” என்று விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.
