தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட SI தேர்வு வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 1299 SI பணியிடங்களுக்கு மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
