ஒன்றிய அரசு ரூ. 2000 கோடி அல்ல… ரூ.10000 கோடி கொடுத்தாலும்… இதை மட்டும் செய்யவே மாட்டோம்… துணை முதலமைச்சர் உதயநிதி திட்டவட்டம்..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் 2026 இல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் களம் தற்போதையிலிருந்து சூடு பிடிக்க விட்டது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, TVK  உட்பட பல கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவ உள்ளது. அதாவது திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக கூட்டணியில் ஒரு அணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கிறது.

இந்நிலையில் இன்று (செப்.26) நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தி திணிப்பை நடைமுறைக்கு கொண்டு வர நினைக்கும் மத்திய அரசு, 10,000 கோடி ரூபாய் நிதி தர மறுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்.  பாஜக அரசு ரூ. 2000 கோடி அல்ல ரூ.10000 கோடி நிதி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்கவே மாட்டோம்” என்று கூறியுள்ளார்.