881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி…! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2025

Spread the love

அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, எழை எளிய மாணவர்களின் உயர்கல்விக்காக 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை கொண்டு பணியமர்த்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கினங்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது.

அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். தற்போது 881 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

   

அக்டோபர் மாதம் 8-ஆம் தேதிக்குள் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஜூலை 21ஆம் தேதி அறிவிப்பின்படி ஏற்கனவே கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளை பின்பற்றியும் கல்வித்தகுதி மற்றும் நேர்முக தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.