மக்களே…! Paytm மூலம் பணம் அனுப்பினால் தங்கம் கிடைக்குமாம்…! சூப்பரான திட்டம் அறிமுகம்…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2025

Spread the love

பண்டிகை சீசனை முன்னிட்டு பேடிஎம் ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பேடிஎம் செயலி மூலம் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயங்கள் கிடைக்கும். அந்த தங்க நாணயங்களை டிஜிட்டல் தங்கமாக மாற்றிக் கொள்ளலாம். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதோடு எதிர்காலத்திற்காக சேமிக்கவும் அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஸ்கேன் அண்ட் பே, ஆன்லைன் ஷாப்பிங், பணம் அனுப்புதல், ரீசார்ஜ், பில் பேமென்ட் போன்ற வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீத மதிப்புள்ள தங்க நாணயங்களை பெற்றுக் கொள்ளலாம். 100 தங்க நாணயங்களை 1 ரூபாய் மதிப்புள்ள தங்கமாக மாற்றலாம். யுபிஐ கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் இந்த சலுகை பொருந்தும். யுபிஐ மூலம் கிரெடிட் கார்டு மற்றும் ரூபே கிரெடிட் கார்டுகளை உபயோகப்படுத்தி பணம் செலுத்தினால் இரட்டிப்பு தங்க நாணயங்கள் கிடைக்கும்.