தனிநபர் கடன் வழங்கும் தமிழக அரசு…! யாருக்கெல்லாம் கிடைக்கும்…? வெளியான முக்கிய தகவல்…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2025

Spread the love

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனிநபர் கடன் உதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில உலக வாழ்வாதார இயக்கத்தில் சிறப்பு சுய உதவி குழுக்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தனிநபர் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கவும் தனிநபர் ஒருவருக்கு 40,000 ரூபாய் கடன் வழங்கப்படும்.

சுமார் 6000 நபர்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் உதவியை பெற சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது பெற்றோர் கணவர் அல்லது மனைவி ஆகியோர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக இருக்க வேண்டும். திருநங்கைகள் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழில் செய்ய விருப்பம் இருப்பவர்களுக்கு கடனுதவி கிடைக்கும்.

   

கடன் உதவி பெறுபவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஊரகப்பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரி வேண்டும். தனிநபர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால் UDID அடையாள அட்டை அல்லது வேறு அடையாள அட்டை பெற்றிருப்பது அவசியம். திருநங்கை என்றால் சமூக நலத்துறையால் வழங்கப்படும் விளையாட அட்டையை பெற்றெடுக்க வேண்டும்.

   

மேலும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் உற்பத்தி சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு பிணையம் எதுவும் இல்லாமல் 40,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை உரிய காலத்தில் திரும்ப செலுத்தி விட்டால் மீண்டும் வங்கி கடன் உதவி பெற்று கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் அனைத்து மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.