பொதுவாகவே திருமணம் மற்றும் காதுகுத்து என எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றாலும் பணத்தை பரிசாக கொடுக்கும் நடைமுறையை மொய் என்று அனைவரும் குறிப்பிடுகின்றோம். மொய் செய்யும் பழக்கம் நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தமிழர்கள் தான் இதை பின்பற்றுகிறார்கள். அதன்படி மொய் வைக்கும் போது ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வழக்கம் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு ஒரு ரூபாய் பணத்தை சேர்த்துக் கொடுப்பது ஏன் என யாராவது யோசித்துப் பார்த்துள்ளீர்களா?. இதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே மொய் வைக்கும் போது 100, 500 மற்றும் ஆயிரம் என்று மொழி கொடுக்காமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் கொடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்குப் பின்னால் ஒரு காரணம் உள்ளது. முந்தைய காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்களில் மட்டுமே உருவாக்கப்பட்டது. ஒரு வராகன் பொன் என்பது 32 குன்றி எடை கொண்டதாக காணப்பட்டது. அவை முன்னோர்களால் 32 வகையான தர்மங்களை குறிப்பிட்டுள்ளது.
அதனால் இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயம் என்று முன்னோர்கள் அதுபோலவே மற்றவர்களும் தர்மம் வலுவாமல் இந்த பணத்தை செலவிட வேண்டும் என்பதை நினைவுபடுத்த வேண்டும் என்ற உன்னதமான நோக்கம் கருதி மதிப்புமிக்க உலோக நாணயங்களை மொய்ப்பணமாக கொடுக்க வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்றினர். ஆனால் மொழி கொடுப்பவர்களுக்கும் தாங்கள் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மன நிறைவு ஏற்படும். ஆனால் பிற்காலத்தில் நோட்டுகள் புழக்கத்தில் வந்த பிறகு அந்த வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொய்ப்பனமாக எத்தனை ரூபாய் கட்டுகள் வைத்தாலும் அதனுடன் நிஜமான மதிப்பு கொண்ட ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தை சேர்த்துக் கொடுக்கும் முறையை பின்பற்றத் தொடங்கினர்.
இது காலப்போக்கில் ஒரு கலாச்சாரமாகவே மாறியது. வேறு பல காரணங்களும் இதற்கு உள்ளது. அதாவது 100, 500 மற்றும் ஆயிரம் என்று ரூபாய் நோட்டுக்களை மையாக கொடுக்கும் போது அந்த உறவுகளுக்கு ஒரு முடிவு கட்ட தொகையை கொடுப்பதாக நினைத்தார்கள். அந்த எண்ணத்தை மாற்றுவதற்காக இந்த உறவு தொடர வேண்டும் என்பதற்காக இவ்வாறு ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டது. மொய் பணத்துடன் ஒரு ரூபாயை சேர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் பின்பற்றப்பட்டது.
திருமணத்தில் பணத்தை மொயாக வழங்கும் போது மக்கள் பெரும்பாலும் ஒரு ரூபாய் என முடியும் ஒற்றைப்படை தொகைகளை தேர்வு செய்கிறார்கள். இதனால் அந்த தொகையை சம பங்காக பிரிக்க முடியாது. இதே போல இந்த தம்பதியினரும் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கமும், இவ்வாறு மொய்ப்பணத்தில் ஒரு ரூபாய் நாணயம் சேர்க்கப்படுவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
