தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், ஐ ஆர் சி டி சி உடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கக்கூடிய பயணிகளின் வசதிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு வெறும் 20 ரூபாய்க்கு சிக்கன உணவு என்ற திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலையில் உணவுகளை வழங்குவது தான். இந்தத் திட்டம் பற்றி இன்றுவரை பயணிகள் பலரும் தெரியாமல் உள்ளன. எனவே சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேசமயம் 27 ரயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவுகளை வழங்கி வருகின்றன. இந்த கடைகளில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
