கண்டிஷன் போட்ட இயக்குனர்…! SPB-க்காக ஒரு மாதம் காத்திருந்து கம்போஸ் செய்த இளையராஜா…. அது என்ன பாட்டு தெரியுமா…?

By Devi Ramu on புரட்டாதி 25, 2025

Spread the love

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா ஒரு மாதம் காத்திருந்து ஒரு பாடலை இசை அமைத்திருப்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? கார்த்திக் நடித்த கிழக்கு வாசல் படத்தில் “பச்சமல பூவு” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். ஆர்.வி உதயகுமார் இந்த பாடல் வரிகளை எழுதி இளையராஜாவிடம் கொடுத்து இந்த பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் தான் பாட வேண்டும் என கண்டிப்பாக கூறிவிட்டார்.

அந்த சமயம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் இருந்ததால் இளையராஜா வேறு ஒருவரை வைத்து அந்த பாடலை பாட வைக்கலாம் என கூறியுள்ளார். அதற்கு உதயகுமார் மறுப்பு தெரிவித்தாராம். வேறு வழி இல்லாமல் எஸ்.பி பாலசுப்ரமணியம் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு தான் ஒரு மாத காலம் காத்திருந்து அந்த பாடலை ரெக்கார்ட் செய்துள்ளனர். அந்த பாடலை எஸ்..பி பாலசுப்ரமணியம் குரலில் பதிவு செய்து உணர்வுபூர்வமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.