மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் 17 வயது சிறுமியின் instagram மூலமாக கடந்த மார்ச் மாதம் தெரிந்த உறவினரிடமிருந்து வந்த பாலோ ரெக்வஸ்ட்டை ஏற்றுள்ளார். பிறகு அவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த நபர் மற்றொரு நபரையும் அந்த பெண்ணுக்கு அறிமுகப்படுத்தி வைத்த நிலையில் அவருடைய சிறுமி சகஜமாக பேசி வந்தார். இந்நிலையில் சிறுமி அந்த நபருடன் ஒரு கட்டத்தில் நெருக்கமாக பழகிய நிலையில் உடல் ரீதியான உறவுகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குற்றவாளிகள் நெருக்கமான வீடியோக்களை பதிவு செய்து அதனை தனக்கு தெரிந்த ஆறு நண்பர்களுடன் பகிர்ந்துள்ளனர். அதேசமயம் வீடியோவை காட்டி பலமுறை சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் சிறுமியை கர்ப்பமான நிலையில் அந்த சிசு கலைக்கப்பட்டது. இந்த சம்பவம் ஒரு உறவினர் மூலமாக தந்தைக்கு தெரிய வந்தது. அந்த நபர் வைரலான இந்த வீடியோவையும் காட்டியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை சிறுமியிடம் இது குறித்து கேட்ட நிலையில் தனக்கு நடந்ததை அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த 7 நபர்களையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
