என்னை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவதா..? EPS-க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

By Soundarya on புரட்டாதி 25, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமான தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கியும் பேசி வருகிறார்கள். அந்தவகையில் பிச்சைக்காரர்கள் போல ஓட்டு போட்ட சட்டை மாதிரி செல்வப் பெருந்தகை கட்சி மாறி வருகிறார் என்று இபிஎஸ் செல்வப்பெருந்தகையை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை  சந்தித்து பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பிச்சைக்காரன் என்று இழிவு படுத்துவது ஒருவரை பழிக்கின்ற செயல் மட்டுமல்ல இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் பாதிப்பை மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும் என்று கூறியுள்ளார்.