மிளகாய் பொடி தூவி கடத்தப்பட்ட குழந்தை…. 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்…. நடந்தது என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2025

Spread the love

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேணு. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்க வருகிறார். நேற்று வேணு தனது 4 வயது மகன் முகேஷை உணவு இடைவெளிக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது திடீரென வந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி முகேஷை கடத்தி சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து வேணு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுவனை கடத்தி சென்ற கார் மாதனூர் பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதி மேம்பாலம் அருகே நின்றது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டனர். சிறுவனை கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தி சென்றார்கள் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் போலீசார் சிறுவனை மீட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.