தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் தனித்துவமான நகைச்சுவை மற்றும் ரசிகர்களின் அன்பை பெற்று புகழின் உச்சத்திற்கு சென்றவர்தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் சமீபத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஸ்டாண்ட் அப் காமெடி இன் என மேடை நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய சங்கர், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.
அன்றாட பிசியான வாழ்க்கையில் சிரிப்பு மறந்த மக்களை தன்னுடைய காமெடி மூலமாக மகிழ வைத்தவர். இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கியிருந்த போதும் உடல் நல குறைவு மோசம் அடைந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்தது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சாந்தி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை மட்டும் வரவில்லை. வயிறு வீக்கம், மண்ணீரல் வீக்கம், கால் வீக்கம் போன்ற ஏராளமான பிரச்சனைகள் இருந்தன. உடனே அவருக்கு நாட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு லிவர் முழுவதும் அழுகிவிட்டது. இதுதான் அவர் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ள இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
