“காந்தாரா படம் பார்க்கணும்னா அசைவம் சாப்பிட கூடாது….” வைரலான போஸ்டர்…. இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் நெத்தியடி பதில்…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2025

Spread the love

ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாவது பாகமாக காந்தாரா சாப்ட்வேர் 1 உருவாகியுள்ளது. அடுத்த மாதம் 2- ஆம் தேதி ரிலீசாக உள்ள காந்தாரா சாப்ட்வேர் 1 படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் 33 கோடிக்கு விநியோகம் நடந்துள்ளதாக தெரிகிறது. 30 நாடுகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று காந்தாரா பட குழு வெளியிட்டதாக ஒரு போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த படத்தில் காந்தாரா திரைப்படத்தை பார்க்க விரும்பும் மக்கள் அந்த படத்தை பார்க்கும் வரை மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அவை மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது, அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது. அந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் இந்த மாதிரி ரூல்ஸ் இருந்தா தமிழ்நாட்டில் ஒருத்தன் கூட காந்தாரா படத்தை பார்க்க மாட்டான் என கிண்டலடித்து வந்தனர்.

   

இந்த போஸ்டர் குறித்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, உணவு என்பது அவரவர் விருப்பம். இதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அது போலியாக உருவாக்கப்பட்ட போஸ்டர். எங்கள் கவனத்திற்கு வந்த போது எங்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சில செய்த வேலை தான் இது. இதற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என கூறியுள்ளார்.