ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரானது துபாயில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது சூப்பர் நான்கு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான அணிகள் மோதியது. இந்த போட்டியில் அபிஷேக் வர்மா மற்றும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இந்திய ரசிகர்களை பார்த்து விமானத்தை சுட்டு வீழ்த்துவது போல சைகை செய்தது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
Haris Rauf never disappoints, specially with 6-0. pic.twitter.com/vsfKKt1SPZ
— Ihtisham Ul Haq (@iihtishamm) September 21, 2025
இதனை தொடர்ந்து ரவுஃப்-இன் மனைவி முஸ்னா மசூத், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கணவர் 6-0 சைகை காட்டும் புகைப்படத்தை பகிர்ந்து “போட்டியில் தோற்றோம் ஆனால் போரில் வென்றோம்” என்று தலைப்பிட்டு இருந்தார். இந்த பதிவு ரசிகர்களை கொந்தளிப்பில் ஏற்படுத்திய பிறகு அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சில மணி நேரங்களில் நீக்கப்பட்டு விட்டது.
