BREAKING: தமிழகத்தை புரட்டி எடுக்கப்போகும் கனமழை… செப்டம்பர் 29 வரை அலர்ட்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் செப்டம்பர் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி வருகின்ற செப்டம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மலையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றை வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.