அம்மாடியோ எத்த தண்டி… ஹோட்டல் பாத்ரூமில் படம் எடுத்து ஆடிய 5 அடி விஷ பாம்பு… அலறிய சுற்றுலா பயணிகள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. முன்பெல்லாம் காடுகளில் தான் பாம்புகள் அதிகமாக இருக்கும். இப்போதெல்லாம் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் மக்கள் இருப்பிடங்களை தேடி பாம்புகள் வந்து விடுகின்றன. சாதாரணமாக வீட்டில் நிறுத்தப்பட்டு இருக்கும் பைக்கில் தொடங்கி ஷூ வரை பாம்புகள் பதுங்கி இருக்கின்றன.

அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஹோட்டலின் பாத்ரூமில் விஷப்பாம்பு பதுங்கி இருந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹோட்டலில் தங்கி இருந்த குடும்பம் டாய்லெட்டுக்குள் சென்றபோது திடீரென்று ஐந்து அடி நீளம் பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

   

உடனே ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த காட்சியை இணையத்தில் தீயாய் பரவுகிறது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் பாம்பை மீட்டனர். பிறகு பாதுகாப்பாக அருகில் உள்ள காட்டில் பாம்பு விடப்பட்டது. இந்த வகை விஷப்பாம்பு கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழலில் ஹோட்டல் பாத்ரூமில் பாம்பு பதுங்கி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.