BREAKING: காலையிலேயே ஷாக்… செங்கோட்டையன் இடத்தை நிரப்பிய ஏ.கே செல்வராஜ்… செம குஷியில் இபிஎஸ்…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன.

அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் வெளியீட்டு வருகின்றார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

   

இந்நிலையில் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபியில் இபிஎஸ்க்கு ஆட்டம் பாட்டத்துடன் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். செங்கோட்டையனின் கலக குரலால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இனி ஈரோட்டில் செங்கோட்டை எனக்கு பதில் நான்தான் என்பதை காட்டும் வகையில் ஏகே செல்வராஜ் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தைப் பார்த்து இபிஎஸ் மகிழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.