நடிகர் எம்.ஆர் ராதாவின் மனைவி காலமானார்… தாயின் பிரிவால் சோகத்தில் நடிகைகள் ராதா, நிரோஷா..!!

By Soundarya on புரட்டாதி 22, 2025

Spread the love

நடிகை ராதிகா மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள். ஹீரோயினாக பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர ரோல்களில்   நடித்து வருகிறார். குறிப்பாக அம்மா ரோல்களில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகாவின் அம்மா கீதா ராதா(86) கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று சென்னையில் காலமானார்.

வயது முதிர்வு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மகள் ராதிகா தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று (செப்.22) தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது