இனி நடிகர் – நடிகைகள் மீது அவதூறு பரப்பினால் சிறை… நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on புரட்டாதி 22, 2025

Spread the love

தென்னிந்திய நடிகர் சங்க 69-வது பொதுக்குழு கூட்டமானது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் நேற்று  நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.  அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி யூடியூப்பில் உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.

மன உளைச்சலுக்கு உள்ளான உறுப்பினருக்கு அந்த நபர் 3 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈட்டு வழங்க வேண்டும். மேலும் அவதூறு செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.