ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது குழந்தை தனது வயிற்றில் வளர்வதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
“As per all your requests, here’s the full video!” Part -2 @MadhampattyRR #parentstobe#madhampattyrangaraj #chefrangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/lRPtYfWMVm
— Joy Crizildaa (@joy_stylist) September 20, 2025
அதன் பிறகு தன்னை பற்றி அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தடுக்கவும், அவதூறாக வெளியிட்ட வீடியோக்களை நீக்கவும் உத்தரவிட வலியுறுத்தி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை ஜாய் கிரிஸில்டா தொடர்புபடுத்தி பேசியதாகவும், இதனால் அந்த நிறுவனத்திற்கு 12.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில் உங்கள் அனைவரின் வேண்டுகோளின்படி, இதோ முழு காணொளி என்று முழு வீடீயோவையும் வெளியிட்டுள்ளார் ஜாய் கிறிஸ்சில்டா.
