கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் முகமது அஜ்மல் உசேன். கடந்த 1 வருடத்திற்கு முன்பு முகமதுவுக்கு ரயில் பயணத்தின் போது ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி அந்த இளம் பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் பல்வேறு காரணங்களை கூறி அந்த இளம் பெண்ணிடமிருந்து முகமது 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கியுள்ளார்.
தொடர்ந்து பணம் கேட்டதால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் முகமது அஜ்மல் உசேன் இளம்பெண்ணை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரு வருடம் சிறையில் இருந்த முகமது ஜாமினில் வெளியே வந்த பிறகும் கடந்த டிசம்பர் மாதம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக பழகி தன்னை கடற்படை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து லட்ச கணக்கில் பணம் பறித்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மீண்டும் முகமது அஜ்மல் உசேனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
