நான் உண்மையிலேயே உத்தமி தான்…. கொதிக்கும் எண்ணெயில் கைவிட்ட இளம்பெண்.. கணவர் வீட்டார் செய்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 21, 2025

Spread the love

குஜராத் மாநிலத்தில் விஜாப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்ணை அவருடைய புகுந்த வீட்டை சேர்ந்த உறவினர்கள் கொடுமை செய்துள்ளனர். இதில் அந்தப் பெண்ணின் கணவரின் சகோதரி ஜமுனாவுக்கு சில சந்தேகம் வந்துள்ளது. அந்தப் பெண் கணவருக்கு உண்மையான மனைவியாக உள்ளாரா இல்லையா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும் என விரும்பியுள்ளார். இதனால் ஜமுனா அவருடைய கணவர் மனுபாய் தாக்கூர் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து அந்த பெண்ணை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு அந்தப் பெண்ணிடம் உன்னுடைய கணவருக்கு நீ உண்மையான மனைவி என்றால் கொதிக்கும் எண்ணெய் உள்ள பானைக்குள் கைவிடு, அப்படி உண்மையான மனைவியாக இருந்துவிட்டால் உனக்கு எதுவும் ஆகாது என்று கூறியுள்ளனர்.

இதனால் அந்தப் பெண்ணும் கொதிக்கும் எண்ணெயில் விரல்களை விட்டு உடனடியாக வெளியே எடுத்த நிலையில் அவருடைய விரல்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய நான்கு பேரும் தப்பி சென்று விட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இது பற்றிய வீடியோ ஒன்று நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.