கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இருந்து துடியலூர் சென்று கொண்டிருந்த 111 என்ற நம்பர் கொண்ட அரசு பேருந்தில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் ஏரியுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனர் உங்களுக்கு ஓசி பேருந்து பின்னால் வருது, அதுல ஏறுங்க என்று கூறியதால் கோபம் அடைந்த அந்த பெண் தூய்மையாளர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் நாங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொள்கிறோம், எங்களை ஏன் அப்படி சொல்றீங்க என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் நேற்று மாலை அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறியுள்ளார்.
அவருடன் மேலும் இரண்டு பெண் தூய்மை பணியாளர்களும் ஏறிய போது ஓட்டுநர் உங்களுக்கான ஓசி பேருந்து பின்னால் வருகிறது அதில் ஏறுங்க என்று கோபமாக கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த மூன்று பெண்களும் ஓட்டுநரிடம் எப்படி எங்களை அப்படி நீங்கள் சொல்லலாம் என்று கேட்டு நாங்கள் காசு கொடுத்தே டிக்கெட் எடுக்கிறோம் தானே, அப்புறம் எதுக்கு எங்களை ஓசி பேருந்தில் வர சொல்றீங்க என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் ஆதரவாக பேசிய நடத்துனரையும் அந்த மூன்று பெண்களும் எழுத்து வாங்கினர். இதனை பேருந்தில் இருந்த ஒரு பயணி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
