“பரப்புரையில் விஜய் பேசியது தவறான தகவல்” தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

By Soundarya on புரட்டாதி 21, 2025

Spread the love

அலையாத்தி காடுகளை காக்க அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கடல்சால் கல்லூரி எதுவும் நாகையில்  இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்பகம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அலையாத்தி காடுகளை காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கடல்சால் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல்.

தமிழ்நாடு அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் வருடத்தில் 45 சதுர கிலோ மீட்டராக இருந்த அலையாத்தி காடுகள் இன்று 90 சதுர மீட்டர் ஆக பெருகி உள்ளது.  ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நாகையில் இயங்கி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.