பாமகவில் தொடரும் பரபரப்பு… அன்புமணியை அடக்க ராமதாஸ் போடும் மாஸ்டர் பிளான்?… இப்படி ஒரு முடிவு பண்ணிட்டாரே…!

By Nanthini on புரட்டாதி 20, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக என்ற நிலைமை மாறி தற்போது விஜய்யும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பிரதான கட்சிகளின் வெற்றியே கூட்டணி கட்சிகளை நம்பி தான் இருக்கின்றன.  இதனிடையே பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை ராமதாஸ் வெளியிடவில்லை.

அதேசமயம் பாமக தலைவராக அன்புமணியை EC அங்கீகரித்தது. இதனை பின்னடைவாக கருதிய ராமதாஸ் அன்புமணியை அடக்க டெல்லி செல்வதே ஒரே வழி என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடியை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளாராம். பிரதமர் மோடியும் ராமதாஸ் மீது மதிப்பு கொண்டவர் என்பதால் வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆதரவை தன் பக்கம் திருப்புவாரா ராமதாஸ் என்பதை எதிர்நோக்கி தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.