திருமணத்திற்கு பிறகும் காதல்…!! கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை உயிருடன் புதைத்த மனைவி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2025

Spread the love

தர்மபுரியை சேர்ந்த ரூபன் கவியரசு(42) என்பவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா(30) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பள்ளியில் படிக்கும் போது நிர்மலா பொறியாளரான அபினேஷ்(35) என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அபினேஷுடன் காதலை வளர்த்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த ரூபன் தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ரூபனை கொலை செய்ய திட்டமிட்டனர். கடந்த 2017-ஆம் ஆண்டு ரூபனை கடத்தி சென்று அவரது கை, கால்களை கட்டி போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் ஒரு தனியார் கல்லூரி அருகே குழிதோண்டி ரூபனை உயிருடன் புதைத்து கொலை செய்துள்ளனர்.

   

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நிர்மலாவை கைது செய்து விசாரித்த போது அவர் தனது கள்ளக்காதலனோடு இணைந்து ரூபனை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் நிர்மலா, அபினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.