திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் குமார்(43) என்பவர் விவசாய வேலையுடன் பக்தர்களுக்கு அழகு குத்தும் வேலையையும் செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயா (36) என்ற மனைவி உள்ள நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் தாலுகா சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகனும் விவசாயியுமான பாலு (35) என்ற நபருடன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் தொழில் ரீதியாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாலு அடிக்கடி குமாரின் வீட்டுக்கு வந்து சென்ற போது குமாரின் மனைவி விஜயா உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இது குறித்து குமாருக்கு தெரிய வந்த நிலையில் நேற்று முன்தினம் குமார் திடீரென இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விஜயா மற்றும் பாலு ஆகியோரை கைது செய்து விசாரித்த போது, விவசாய வேலை தொடர்பாக குமாருக்கு 15 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் சுமையால் அடிக்கடி குமார் விஜயாவை அவரது நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்ததோடு கடனை தான் அடைக்க முடியாது நீயே அடைத்துவிடு என்று கூறி திட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குமாரை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் பாலுவுடன் நிம்மதியாக இருக்கலாம் என்று விசையாக முடிவு செய்ததால் அப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் விஜய் ஆர் தினமும் இரண்டு தூக்க மாத்திரைகள் வாங்கி வைத்துள்ளார். குமாருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் போது முருங்கை இலை சூப் குடிக்கும் பழக்கம் இருந்ததால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயாவும் பாலுவும் நேற்று முன்தினம் குமார் வயிறு வலியால் துடித்த போது சுமார் 20 தூக்க மாத்திரைகளை முருங்கை இலை சூப்பில் கலந்து கொடுத்துள்ளனர். இதனை குடித்த குமார் சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டாரா என விஜயா பார்த்தபோது உயிருடன் இருந்துள்ளார்.
உடனே அருகில் இருந்த வயலில் பூ பறித்துக் கொண்டிருந்த பாலுவை அழைத்து குமார் இன்னும் சாகவில்லை என்று கூறியுள்ளார். பிறகு பாலு குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல இருவரும் அங்கிருந்து பூ பறிப்பதற்காக வயலுக்கு சென்று விட்டனர். பிறகு வீட்டுக்கு வந்த விஜயா குமார் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக கூறி அலறி துடிப்பது போல நாடகமாடியுள்ளார். இந்த உண்மை போலீசாருக்கு தெரிய வர இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை கொலை செய்யப்பட்டு தாய் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் குழந்தைகள் ஆதரவின்றி தவிப்பதை பார்த்து பலரும் கண்ணீர் வடிக்கின்றனர்.
