இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால் ஆதார் சேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையம் மூலமாக மக்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான புதிய கட்டண மாற்றம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து UIDAI இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் முகவரி மாற்றம் செய்வதற்கான சேவைக்கு கட்டணம் தற்போது உள்ள 50 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்கிறது. அதனைப் போலவே புகைப்படம் மாற்றம் பிற புதுப்பிப்பு சேவைகளின் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கும் என்றாலும் உயர்வு மிகக் குறைந்த அளவில் மட்டுமே உள்ளது எனவும் அதிகாரிகள் கூறுகின்றன
