திருமணம் செய்யாமல் வாழ்ந்த தம்பி…! “10 ஏக்கர் நிலத்திற்காக 70 வயது அண்ணனை…” கனவிலும் நினைக்காத பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2025

Spread the love

திருச்சி மாவட்டம் மட்டப்பாறை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அரசன். இவரது தம்பி பழனியாண்டி. அரசனுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் பழனி திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்தார். அரசன் அப்பகுதியில் மாடு வியாபாரம் செய்து மனைவி காளியம்மாளுடன் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகிலேயே குடிசை அமைத்து பழனியாண்டி வசித்து வந்தார். அண்ணன் தம்பிக்கு பூர்வீகமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது.

பழனியாண்டிகும், அரசனுக்கும் அந்த நிலத்தை பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பழனியாண்டி தனது அண்ணனை இரும்பு கம்பியால் அடித்தார். இதனால் படுகாயமடைந்த அரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பழனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.