டேய் என்ன விட்ருங்கடா… ஒரு குரங்கை வைத்து படாத பாடுப்படுத்தி எடுத்த சேட்டைக்கார பசங்க… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை கவரும் வகையில் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவதால் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு கூட்டம் உள்ளது. பொதுவாகவே எந்த இடத்தில் குழந்தைகள் இருந்தாலும் அந்த இடம் அப்படியே மகிழ்ச்சியாக மாறிவிடும். குழந்தைகள் செய்யும் சிறு சுற்றித்தனங்கள் கூட நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தான் இருக்கும். அவர்கள் செய்யும் சில செயல்கள் வெறுப்பை உண்டு பண்ணாலும் அதில் கொஞ்சம் சேட்டை நிறைந்து இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது இணையத்தில் வைரலாகும் வீடியோவில் இரண்டு சிறு குழந்தைகள் ஒரு பெரிய குரங்கின் தலையை தொட்டு அதன் முகத்தை ஆராய்ந்து சேட்டை செய்கின்றன. ஆச்சரியமாக அந்த குரங்கு அமைதியாக அமர்ந்து குழந்தைகளின் விளையாட்டை பொறுத்துக் கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வரும் நிலையில் குழந்தைகளின் அன்பு மற்றும் விலங்குகளுடன் மனிதர்கள் கொண்டிருக்கும் இயல்பான உறவை நினைவூட்டுகிறது. இவ்வாறு குழந்தைகளும் குரங்கும் இடையே ஏற்பட்ட அன்பான தருணம் மனிதரும் விலங்குகளும் பகிர்ந்து கொள்ளும் அற்புதமான பந்தத்தை உலகிற்கு காட்டுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் பலருடைய மனதையும் கவர்ந்துள்ளது.