சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாக கூடிய சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு குடும்பம் ரோப் வே பயணத்திற்கு தயாராக இருந்தது. ஊழியர் டிக்கெட் சரி பார்த்த பின்னர் முதலில் ஒருவரை அனுப்புகின்றார். ஆனால் அவர் உள்ளே சென்றதும் ரோப் வே இயந்திரம் திடீரென்று உடைந்து கீழே விழுந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக ஊழியர் உடனடியாக நடவடிக்கை எடுத்த அந்த பயணியின் உயிரை காப்பாற்றினார். அந்த குடும்பத்தில் இருந்த குழந்தைகள் உட்பட யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஒரு நிமிடம் தாமதமாக இருந்தால் பல உயிர்கள் ஆபத்தில் சிக்கி இருக்கும் என்று இந்த வீடியோவை பார்த்த பலரும் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் ஒரு நொடியின் தவறால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்க முடிந்தது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த வீடியோ எச்சரிக்கையையும் விழிப்புணர்வும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. இந்த காட்சியை ஹாலிவுட் திகில் படங்களை நினைவூட்டும் வகையில் இருந்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
That moment when the park turns into Final Destination🤕 pic.twitter.com/ar2j6ABQfT
— Insane Reality Leaks (@InsaneRealitys) September 14, 2025
