ஒரு ஸ்பூன் சியா விதை போதும்…! இந்த தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மைகளா….? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2025

Spread the love

சால்வியா ஹிஸ்பானிகா தாவரத்திலிருந்து சியா விதைகள் தரப்படுகிறது. இதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தாதுக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கப் சியா விதை தண்ணீரை குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். விதையில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து குடல் இயக்கங்களை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்தும்.

இதில் உள்ள நார்ச்சத்து புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் எடையை குறைக்க உதவும். சியா விதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அலர்ஜியை குறைக்க உதவி செய்கிறது. மேலும் சரும பாதிப்பு மற்றும் முகப்பருவை குணப்படுத்துகிறது. சியா விதைகள் உள்ள நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகள் செரிமானத்தை மெதுவாக்கி ரத்த சர்க்கரை அளவை நிலை நிறுத்த உதவி செய்கிறது.