கேரள மாநிலம் பத்திரம் திட்ட அருகே இரண்டு வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்து சித்திரவதை செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்திரம் திட்டா பகுதியில் ஜெயேஷ் (29) ரஷ்மி (23) தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவருக்கு ஆலப்புழாவை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் ரஷ்மி அந்த வாலிபரை நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அதனை நம்பி அந்த வாலிபர் ரஷ்மியின் வீட்டுக்கு சென்று உள்ளார். வீட்டுக்குள் சென்ற அந்த வாலிபர் பெண்ணிடம் நெருங்கி சென்றபோது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் தன்னுடைய செல்போனில் அதனை படம் எடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அவர் மனைவியுடன் சேர்ந்து அந்த வாலிபரை மிரட்டி அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் 6000 ரூபாய் பணத்தை பறித்துள்ளார். மேலும் அந்த வாலிபரை மிரட்டி கைகளை கட்டி தொங்கவிட்டு மர்ம உறுப்பில் 26 ஸ்டேப்ளர் பின்களை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். மேலும் அவருடைய கைவிரல் நகங்களை பிடுங்கினர்.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அவரது வாயை துணியால் கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் வாலிபரின் சத்தம் கேட்டு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் தொடர்புடைய கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்துக்காக அந்த பெண் வாலிபர்களை குறி வைத்து முதலில் ஆசை வார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தியுள்ளார். பிறகு வீட்டுக்கு அழைத்து பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளார். மனைவிக்கு உடந்தையாக கணவரும் இருந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி தன்னுடன் வேலை பார்த்த ஒரு வாலிபரையும் இவ்வாறு வீட்டுக்கு அழைத்து பணத்தை பறித்து கொண்டு சித்தரவதை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் ஆர் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
